/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சந்துாரில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா சந்துாரில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா
சந்துாரில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா
சந்துாரில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா
சந்துாரில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா
ADDED : ஜூன் 16, 2025 03:24 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, சந்துாரில் திரவுபதியம்மன் கோவில் மகா-பாரத திருவிழா கடந்த மே, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கி-யது. தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், கோளிவாக்கத்தைச் சேர்ந்த புனிதவதி அம்மையார் சொற்
பொழிவும், திருவண்ணாமலை அழகானந்தல் ராகவன் என்கிற முருகன் கவி வாசிப்பும் மற்றும் போச்சம்பள்ளியை சேர்ந்த நாடக சபா குழுவினரான கூச்சானுார் ராஜாவின் தெருகூத்தும் நடந்து வந்தது. நேற்று பாஞ்சாலி சபதம், துரியோதன் படுகளம் நாடக நிகழ்ச்சி நடந்தது.
இதில் துரியோதனன், பீமன் சண்டையில், பாஞ்சாலியின் சப-தத்தை முடிக்கும் வகையில் துரியோதனனை படுகளம் செய்து, அவன் ரத்தத்தில் பாஞ்சாலி கூந்தலை முடிக்கும் நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து திருநங்கைகளின் கையால் ஆண்களும், பெண்-களும் துடைப்பத்தால் அடி வாங்கி வேண்டுதலை நிறைவேற்-றினர். பின் திரவுபதியம்மன் மற்றும் உப தெய்வங்களை ஊர்வல-மாக எடுத்துச்சென்று ஆற்றில் நீராடிய பின், சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் தீ மிதித்து
வேண்டுதலை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சியில் சந்துார் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.