ADDED : செப் 21, 2025 01:26 AM
அரூர் :தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், அரூர் கச்சேரி
மேட்டில், 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' மற்றும் 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். அரூர் நகர செயலாளர் முல்லைரவி வரவேற்றார்.
கூட்டத்தில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் கான்ஸ்ன்டைன் ரவீந்திரன் பேசுகையில், ''தி.மு.க.,வுடன் நேரடியாக மோத முடியாத, பா.ஜ., தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.
இ.பி.எஸ்., செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவது போல, பா.ஜ.,வை போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்,'' என்றார். மழை பெய்ததால் கூட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்ற போதிலும், அவர் பேசினார். கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.