/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாலையோர வியாபாரிகளுக்கு கடை தி.மு.க., - இ.கம்யூ., தள்ளுமுள்ளு சாலையோர வியாபாரிகளுக்கு கடை தி.மு.க., - இ.கம்யூ., தள்ளுமுள்ளு
சாலையோர வியாபாரிகளுக்கு கடை தி.மு.க., - இ.கம்யூ., தள்ளுமுள்ளு
சாலையோர வியாபாரிகளுக்கு கடை தி.மு.க., - இ.கம்யூ., தள்ளுமுள்ளு
சாலையோர வியாபாரிகளுக்கு கடை தி.மு.க., - இ.கம்யூ., தள்ளுமுள்ளு
ADDED : ஜூன் 26, 2025 01:26 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே, டவுன் பஞ்., நிர்வாகம் மூலம், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையில் இரும்பு தகரத்தில் செய்த, 20 கடைகள் அமைத்துத்தர, ஏற்பாடு நடக்கிறது. இதில், இரு கடைகளை அகற்றி விட்டு, இ.கம்யூ., கட்சியை சேர்ந்த சிலர், தாங்களாகவே கடை அமைத்து வருகின்றனர். இது தொடர்பாக, டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில், நேற்று மாலை ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட தி.மு.க.,வை சேர்ந்தவர் ஒரு தரப்பினராகவும், இ.கம்யூ., கட்சி நகர செயலாளர் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினர் மற்றொரு தரப்பினராகவும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் இரு தரப்பை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு உருவானது.
டி.எஸ்.பி., ஆனந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி,
சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர்.