ADDED : ஜூன் 26, 2025 01:25 AM
அரூர், ஆனி அமாவாசையையொட்டி, நேற்று தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோவில் வளாகத்திலுள்ள ராமர், கவுரி உள்ளிட்ட, ஐந்து தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.ெதாடர்ந்து, நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.