ADDED : அக் 24, 2025 12:52 AM
தர்மபுரி, :தர்மபுரி
மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
சார்பில், தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டில் நடந்த டெங்கு விழிப்புணர்வு
பேரணியை கலெக்டர் சதீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில்,
நாட்டுப்புற கலைகள் மற்றும் நாடகங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.
பேரணியில், கல்லுாரி மாணவ, மாணவியர்,
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் டெங்கு குறித்த
விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவியர் கையில் ஏந்திச் சென்றனர்.
பேரணியில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், கயல்
குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அறிவழகன் மற்றும் அரசு அதிகாரிகள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


