/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு:தர்மபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு:தர்மபுரி மண்டல பொதுக்குழு கூட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு:தர்மபுரி மண்டல பொதுக்குழு கூட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு:தர்மபுரி மண்டல பொதுக்குழு கூட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு:தர்மபுரி மண்டல பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 01, 2025 02:27 AM
தர்மபுரி;தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின், தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், தர்மபுரி மண்டல பொதுக்குழு கூட்டம், தர்மபுரி ஊர்தி ஓட்டுனர் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது.
மாநில துணை பொதுச்செயலாளர் அம்மாசி, மாநில பிரசார செயலாளர், மாதா செட்டி, மாநில துணைத்தலைவர் சிவகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் தர்மபுரி தெய்வம், கிருஷ்ணகிரி சகாதேவன், சேலம் ஜெய்சங்கர், நாமக்கல் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க பணியாளர்களுக்கு, 4வது ஊதியக்குழு அமைத்து, 2 மாதத்திற்குள் அறிக்கை வழங்க ஆணையிட்டும் ஓராண்டாக வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள, ஊதிய குழு அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும். பணியாளர்கள் சங்கங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பொது மென்பொருளில் சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மென்பொருளை எளிமைப்படுத்த வேண்டும். 2003க்கு பிறகு பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரப்படுத்தி, ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.