Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வடகிழக்கு பருவ மழையையொட்டி பென்னாகரத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

வடகிழக்கு பருவ மழையையொட்டி பென்னாகரத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

வடகிழக்கு பருவ மழையையொட்டி பென்னாகரத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

வடகிழக்கு பருவ மழையையொட்டி பென்னாகரத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ADDED : அக் 07, 2025 01:41 AM


Google News
பென்னாகரம், வடகிழக்கு பருவமழையையொட்டி, பென்னாகரம் பகுதி யில் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், புதிதாக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்குமாறு, தாசில்தார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல இடங்களில், 24 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் பருவ மழை காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகளில் தெரிவிக்கலாம். அதன் தொடர்ச்சியாக, பென்னாகரம் தாசில்தார் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் மின் கம்பங்கள் சேதம் மின் கம்பிகள் கீழாக உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் பழுதடைந்து பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள கட்டடங்கள், நீர்நிலை பாதிப்பு குறித்து விபரங்கள் தாழ்வான பகுதிகள் குறித்து, விபரங்கள் மற்றும் பாதிப்புகள் ஏதேனும் நிகழ்ந்தால், உடனடியாக கட்டுப்பாட்டு அறையின், 91 434 2255636 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு, பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம், பொது மக்களை கேட்டு கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us