Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்யாத நிறுவனம் உடனடியாக பதிவு செய்ய அழைப்பு

இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்யாத நிறுவனம் உடனடியாக பதிவு செய்ய அழைப்பு

இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்யாத நிறுவனம் உடனடியாக பதிவு செய்ய அழைப்பு

இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்யாத நிறுவனம் உடனடியாக பதிவு செய்ய அழைப்பு

ADDED : செப் 06, 2025 01:08 AM


Google News
ஓசூர் :இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்யாத நிறுவனங்கள், 'ஸ்பிரீ - 2025' திட்டத்தை பயன்படுத்தி பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் பதிவை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இ.எஸ்.ஐ.சி., சேலம் துணை மண்டல அலுவலக இயக்குனர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.

அனைத்து நிறுவனங்களும் இ.எஸ்.ஐ.,யின் கீழ் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான், 'ஸ்பிரீ - 2025' என்ற திட்டம். டிச., 31க்குள் இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்யாத நிறுவனங்கள், பதிவு செய்யாத காலத்திற்கான சந்தா தொகை, வட்டி அல்லது அபராதம் செலுத்தாமல், இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்து கொள்ளலாம் என, நிறுவனங்களுக்கு கூறப்பட்டது.

'ஸ்பிரீ - 2025' திட்டத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 55,394 பயனாளிகள் பயனடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்யாத நிறுவனங்கள், இத்திட்டத்தை பயன்படுத்தி விரைவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநில மருத்துவ அதிகாரி சுப்பிரமணியன், வேலுார் பிராந்திய நிர்வாக மருத்துவ அதிகாரி குருபிரசாத், ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கண்காணிப்பாளர் கீதா, சமூக பாதுகாப்பு அதிகாரி பாரதிதாசன், இ.எஸ்.ஐ., ஓசூர் கிளை அலுவலக மேலாளர் ரூபாஸ்ரீ மற்றும் 85 நிறுவன பிரதிநிதிகள்

பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us