ADDED : மே 29, 2025 01:21 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்த, 19 வயது மாணவி, அரசு கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
கடந்த, 26ல் காலை, 11:00 மணிக்கு தனது பெற்றோரிடம் அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அங்கு செல்லவில்லை. அவரது மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்நிலையில் மாணவியை ஏற்கனவே திருமணமான சர்மில்குமார் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என, மாணவியின் தந்தை, அரூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.