/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி வருகை; பாதுகாப்பு பணியில் 1,800 போலீசார்முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி வருகை; பாதுகாப்பு பணியில் 1,800 போலீசார்
முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி வருகை; பாதுகாப்பு பணியில் 1,800 போலீசார்
முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி வருகை; பாதுகாப்பு பணியில் 1,800 போலீசார்
முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி வருகை; பாதுகாப்பு பணியில் 1,800 போலீசார்
ADDED : ஜூலை 10, 2024 06:46 AM
தர்மபுரி: தர்மபுரியில் நாளை முதல்வர் பங்கேற்கும், 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில், 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாளையம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நாளை, ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்ட தொடக்க விழா மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதில், காலை, 10:30 மணிக்கு தொடங்கவுள்ள நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அவர் சென்னையில் இருந்து, விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்தை அடைந்து, பின்னர் சாலை மார்க்கமாக, விழா மேடைக்கு வருகிறார். இதையொட்டி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., தலைமையில், 2 டி.ஐ.ஜி.,-க்கள், 6 எஸ்.பி-.,க்கள் உட்பட ஏ.டி.எஸ்.பி.,-க்கள் மற்றும் டி.எஸ்.,பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள் என, 1,800 போலீசார் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.