/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மீன் வளர்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு மீன் வளர்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
மீன் வளர்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
மீன் வளர்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
மீன் வளர்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 17, 2025 01:42 AM
கிருஷ்ணகிரி, பாரூர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய மீன் ஆராய்ச்சியாளர் உதவி பேராசிரியர் சோமு சுந்தரலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலைவாய்ப்பை உருவாக்கவும், மீன் உற்பத்தியை பெருக்கவும், காவேரிப்பட்டணம் ஒன்றியம், புங்கம்பட்டி பாரூரில் அமைந்துள்ள, தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் இயங்கி வருகிறது.
மேலும் இம்மையம், தமிழ்நாடு முழுவதும் உள்ள மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு, மீன் வளர்ப்பு சம்பந்தமான ஆலோசனைகளையும், மீன் வளர்ப்பில் ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு தீர்வையும் அளிக்கிறது.
தற்போது இம்மையத்தில், வரும், 19ல் மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் கட்டண பயிற்சி (நபர் ஒன்றுக்கு, 300 ரூபாய்), வழங்கப்படுகிறது. இதில், குளம் அமைத்தல், குளம் பராமரிப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 86758 58384, 81794 62833, 97152 78354 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.