/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பால் கலெக்டர் ஆபீசில் பா.ஜ.,வினர் மனுஉண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பால் கலெக்டர் ஆபீசில் பா.ஜ.,வினர் மனு
உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பால் கலெக்டர் ஆபீசில் பா.ஜ.,வினர் மனு
உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பால் கலெக்டர் ஆபீசில் பா.ஜ.,வினர் மனு
உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பால் கலெக்டர் ஆபீசில் பா.ஜ.,வினர் மனு
ADDED : ஜூன் 12, 2024 07:35 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் உண்ணா
விரத போராட்டம் நடத்த, போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர்.
அதில், காவேரிப்பட்டணம் அருகே, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை படத்தை ஆட்டின் தலையில் மாட்டி, தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டின் தலையை துண்டித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏற்கனவே புகார் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர். ஆனால், இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், பா.ஜ.,வினர் காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் பந்தல் அமைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என கூறியதையடுத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதுாறும், நாகரீகமற்ற, அநாகரீகமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, பா.ஜ.,வினர் மனு அளித்தனர்.