Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சிப்காட் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு

சிப்காட் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு

சிப்காட் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு

சிப்காட் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு

ADDED : ஜூன் 12, 2024 07:35 AM


Google News
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளியிலுள்ள கே.ஜே.,மாளிகையில், தர்மபுரியில் புதிய சிப்காட் தொழிற்பூங்காவை நிறுவ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக, டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முன்னிலையில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வரவேற்றார்.

சுற்றுச்சூழல் ஆலோசகர் சென்னையை சேர்ந்த, எச்.இ.சி.எஸ்., நிறுவன அலுவலர்கள் தர்மபுரி தாலுகா அதகப்பாடி, நல்லம்பள்ளி தாலுகா தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய பகுதிகளில் புதிய சிப்காட் தொழிற்பூங்காவில் அமையவுள்ள தொழிற்சாலைகள் மற்றும் அவைகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையாத நிலையை உருவாக்க சிப்காட் நிறுவனம் எடுக்க உள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

மேலும், இதுதொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டதில், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதில், சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்படையக்கூடாது. ஏற்கனவே வளர்ந்துள்ள பெரிய மரங்களை பாதுகாக்க வேண்டும். மேலும், நீர்நிலைகள் அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும். உருவாக்கப்படும் தொழிற்சாலைகளில், உள்ளூர் மக்கள் மற்றும் நிலம் வழங்கிய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், என்ற கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதில், தர்மபுரி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, தர்மபுரி சிப்காட் திட்ட அலுவலர் ராஜ்குமார், நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் சிந்து, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வன், நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us