ADDED : டிச 02, 2025 02:41 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் சதீஸ், துவக்கி வைத்தார். இதில், தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட எய்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் உலகநாதன், துணை இயக்குனர் (தொழுநோய்) புவனேஷ்வரி, நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


