/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
ADDED : ஜூன் 08, 2025 01:15 AM
பொம்மிடி, வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளாக பாப்பி
ரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் உள்ளது. இப்பகுதி நெடுஞ்சாலை மற்றும் முக்கிய வீதிகளில் அமைந்துள்ள மின்கம்பங்களில், தனியார் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தட்டிகளை கட்டி வைத்துள்ளனர்.குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி, தேவராஜபாளையம், பையர்நத்தம், சாமியாபுரம் கூட்ரோடு, பொம்மிடி, கடத்துார் பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழில் அதிகரித்து உள்ளது. இதன் விளம்பர தட்டிகள் மின்கம்பங்களில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன.
பல இடங்களில் இவை சரியாக கட்டாததால், அதிகளவில் காற்று வீசும் போது, அவை அறுந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது. மேலும், இதுபோன்ற விளம்பர தட்டிகளால், மின்வாரிய ஊழியர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், 'மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள், பலகைகள் கட்டியுள்ளதால், மின்இணைப்புகளில் பழுது ஏற்படும் போது, அதை சரிசெய்ய கம்பங்களில் ஏற மிகவும் சிரமமாக உள்ளது.
கம்பங்களில் கட்டும் விளம்பர தட்டிகளை அகற்றி, அதை வைத்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து அவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.