Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பெயரளவிற்கு பணியாற்றிய நிர்வாகிகளால் தர்மபுரியில் 3ம் இடம் சென்ற அ.தி.மு.க.,

பெயரளவிற்கு பணியாற்றிய நிர்வாகிகளால் தர்மபுரியில் 3ம் இடம் சென்ற அ.தி.மு.க.,

பெயரளவிற்கு பணியாற்றிய நிர்வாகிகளால் தர்மபுரியில் 3ம் இடம் சென்ற அ.தி.மு.க.,

பெயரளவிற்கு பணியாற்றிய நிர்வாகிகளால் தர்மபுரியில் 3ம் இடம் சென்ற அ.தி.மு.க.,

ADDED : ஜூன் 07, 2024 12:19 AM


Google News
அரூர்: சட்டசபை தொகுதிகளான தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் ஆகியவை தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்டவை. இந்நிலையில் நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் பெயரளவிற்கு நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றியதால், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இது குறித்து அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணையும் என்ற நம்பிக்கையில், தர்மபுரியில் போட்டியிட அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள் பலரும் சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் பா.ம.க.,-பா.ஜ., கூட்டணியில் இணைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டாமல் ஒதுங்கினர்.

இதையடுத்து தர்மபுரி நகர செயலர் பூக்கடை ரவி மகன் டாக்டர் அசோகன் களமிறக்கப்பட்டார். இவர் உள்ளூரை சேர்ந்தவராக இருந்தாலும் அறிமுகமான நபராக இல்லை. மாறாக, தி.மு.க., சார்பில் வக்கீல் மணி, பா.ம.க.,வில் சவுமியா என பரீட்சையமான நபர்கள் களமிறக்கப்பட்டனர்.தர்மபுரியில் இ.பி.எஸ்., கலந்து கொண்ட பிரசாரத்திற்கு, அழைத்து வரப்பட்ட தங்களுக்கு கவனிப்பு செய்யவில்லை என அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது துவங்கிய சொதப்பல் தேர்தல் முடியும் வரை தொடர்ந்தது. வெயிலை காரணம் காட்டி காலை, மாலை என பெயரளவிற்கு நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றினர். இதனால், தர்மபுரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் வக்கீல் மணிக்கும், பா.ம.க., வேட்பாளர் சவுமியாவிற்கும் இடையே, இருமுனை போட்டியாக மாறியது.

தி.மு.க.,-பா.ம.க., வழங்கிய தொகைக்கு இணையாக, கடைசி நேர கவனிப்பும் செய்யப்படவில்லை. இதன் எதிரொலியாக, அ.தி.மு.க., ஓட்டுக்களை தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் பிரித்துக் கொண்டனர். அதே போல், தேர்தல் நாளன்று பல பூத்களில் மதியத்திற்கு மேல் அ.தி.மு.க., ஏஜன்ட்கள் இல்லை.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள்தான் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இதில், அரூர் தொகுதியில் அ.தி.மு.க., இரண்டாம் இடத்தையும், மற்றவற்றில் மூன்றாம் இடத்தையும் தான் பிடிக்க முடிந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us