/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பெண்களை நடுவழியில் இறக்கி விட்ட தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்பெண்களை நடுவழியில் இறக்கி விட்ட தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்
பெண்களை நடுவழியில் இறக்கி விட்ட தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்
பெண்களை நடுவழியில் இறக்கி விட்ட தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்
பெண்களை நடுவழியில் இறக்கி விட்ட தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்
ADDED : ஜூன் 24, 2024 07:19 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுாரை சேர்ந்த ஊர்கவுண்டர் சிங்காரம் அவரது மனைவி சத்யா மற்றும் சிவகாமி ஆகியோர், நேற்று சேலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தர்மபுரி நோக்கி, தனியார் பஸ்சில் வந்தனர்.
பாளையம் சுங்கச்சாவடி அடுத்த பாளையம்புதுார் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்த முடியாது எனக்கூறி, சேலம் மணிபால் மருத்துவனை பஸ் ஸ்டாபில் அவர்கள் இறக்கி விடப்பட்டனர். தகவலறிந்த பாளையம்புதுார் ஊர்மக்கள், பாளையம்புதுார் பஸ் ஸ்டாப் பகுதியில் வந்த சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு, அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அரை மணி நேர பேச்சுவார்த்தை பின், இனி அனைத்து நாட்களிலும், பாயைம்புதுார் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்துவதாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒப்புக்கொண்டதால், பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.