ADDED : மார் 23, 2025 01:30 AM
8.5 பவுன் நகை திருட்டு
தர்மபுரி:தர்மபுரி அருகே, பிடமனேரி கோவிந்த வர்மா தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி, 64. இவர் கடந்த, 16ல் ஓசூரிலுள்ள மகள் வீட்டிற்கு சென்றவர், நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பூஜை அறையிலிருந்த பீரோ லாக்கரை உடைத்து, அதிலிருந்த எட்டரை பவுன் நகை திருட்டு போய் இருந்தது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.