/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம் சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம்
சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம்
சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம்
சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம்
ADDED : அக் 08, 2025 01:41 AM
நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, பாளையம்புதுார், டொக்குபோதனஹள்ளி, மானியதஹள்ளி ஆகிய பஞ்.,களில் செயல்பட்டு வரும், கோழி இறைச்சி கடைகளில் சுகாதாரம் இல்லாமலும், பழைய இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், சில்லி சிக்கனில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துவதாகவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. அதன்படி, நல்லம்பள்ளி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்குமார் தலைமையிலான அலுவலர்கள் நேற்று, 3 பஞ்.,களில் உள்ள இறைச்சி மற்றும் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், இறைச்சி கடைகளில் சுகாதாரம் இல்லாதது மற்றும் சில்லி சிக்கன் கடைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, 7 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், 7,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் தொடர்ந்து செயல்படுவது தெரியவந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.


