/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஆடு திருடிய கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைதுஆடு திருடிய கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
ஆடு திருடிய கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
ஆடு திருடிய கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
ஆடு திருடிய கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
UPDATED : பிப் 11, 2024 02:00 PM
ADDED : பிப் 11, 2024 01:57 PM
பாலக்கோடு : பாலக்கோடு அருகே, காரில் வந்து ஆடு திருடிய கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, மாரவாடியை சேர்ந்த விவசாயி ராஜன், 69.
கடந்த, 8 அன்று ராஜன் தன்னுடைய வீட்டின் வராண்டாவில் ஆடுகளை கட்டி வைத்து விட்டு, நள்ளிரவில் வெளியே வந்து பார்த்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு ஆட்டை பிடித்து காரில் ஏற்றி சென்றனர். இது குறித்து உடனடியாக ராஜன், போலீசுக்கு தகவல் அளித்தார்.காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டு, நான்கு பேர் ஆட்டுடன் காரில் வந்ததால் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், சாமனுாரை சேர்ந்த நவீன்குமார், 21, கொலசனஹள்ளி மனோஜ்குமார், 20, பொம்மனுார் சுனில்குமார், 20, டேனிக்தாமஸ், 19, எனவும், மாரவாடி பகுதியில் இருந்து ஆடு திருடியதும் தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் தனியார் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.ராஜன் அளித்த புகார்படி, மகேந்திரமங்கலம் போலீசார் ஆடு திருடிய நான்கு மாணவர்களை கைது செய்தனர்.