/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வங்கதேசத்தினர் 4 பேர் சென்னிமலையில் கைது வங்கதேசத்தினர் 4 பேர் சென்னிமலையில் கைது
வங்கதேசத்தினர் 4 பேர் சென்னிமலையில் கைது
வங்கதேசத்தினர் 4 பேர் சென்னிமலையில் கைது
வங்கதேசத்தினர் 4 பேர் சென்னிமலையில் கைது
ADDED : ஜூன் 15, 2025 02:26 AM
சென்னிமலை, சென்னிமலையில் நான்கு ஆண்டுகளாக, சட்ட விரோதமாக தங்கி, கட்டட வேலை செய்து வந்த, வங்கதேச நாட்டை சேர்ந்த நான்கு பேரை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வங்கதேச நாட்டை சேர்ந்த சிலர், சட்ட விரோதமாக குடியேறி, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக, சென்னிமலை போலீசுக்கு புகார் சென்றது. இதன் அடிப்படையில் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் வங்காளதேசத்தை சேர்ந்த முகமது நைம் உசேன், 18, முகமது மினார் ஓசைன், 28, முகமது டோரிகுல் இஸ்லாம், 32, முகமது குட்டுஸ் ஓசைன், 31, என நான்கு பேர் சிக்கினர். சென்னிமலை, திருஞான சம்பந்தர் வீதி பகுதியில் நான்கு ஆண்டுகளாக தங்கி கட்டட வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.