Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி, கிருஷ்ணகிரியில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்-1' தேர்வில் 2,847 பேர் 'ஆப்சென்ட்'

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்-1' தேர்வில் 2,847 பேர் 'ஆப்சென்ட்'

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்-1' தேர்வில் 2,847 பேர் 'ஆப்சென்ட்'

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்-1' தேர்வில் 2,847 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : ஜூன் 16, 2025 03:34 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்-1' தேர்வில், 2,847 தேர்வர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கி-ணைந்த குடிமை பணிகள் தேர்வு 'குரூப்-1' பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்-தது. இத்தேர்வுக்கு தர்மபுரி மாவட்டத்தில், 8,611 பேர் விண்ணப்-பித்திருந்தனர். இதில், 37 மையங்கள் தேர்வர்களுக்கு தயார் செய்-யப்பட்டிருந்தது. தேர்வில், 1,648 தேர்வர்கள், 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 6,963 பேர் தேர்வெழுதினர்.* கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய, 'குரூப்-1' முதல்-நிலை எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்ட பின் கூறியதா-வது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 19 மையங்களில் நடந்த இத்தேர்-விற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, 4,090 தேர்வா-ளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 2,891 பேர் தேர்வு எழு-தினர். அதில், 1,199 நபர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு மையங்களில், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பாது-காப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி மற்றும் நடமாடும் மருத்-துவக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்-யப்பட்டிருந்தது,

இவ்வாறு, அவர் கூறினார்.

தாசில்தார் சின்னசாமி, தலைமை ஆசிரியர்

மகேந்திரன் மற்றும் பலர்

உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us