/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் கேரள சமாஜம் சார்பில் 23-ம் ஆண்டு 'ஓணம் திருவிழா' தர்மபுரியில் கேரள சமாஜம் சார்பில் 23-ம் ஆண்டு 'ஓணம் திருவிழா'
தர்மபுரியில் கேரள சமாஜம் சார்பில் 23-ம் ஆண்டு 'ஓணம் திருவிழா'
தர்மபுரியில் கேரள சமாஜம் சார்பில் 23-ம் ஆண்டு 'ஓணம் திருவிழா'
தர்மபுரியில் கேரள சமாஜம் சார்பில் 23-ம் ஆண்டு 'ஓணம் திருவிழா'
ADDED : செப் 15, 2025 01:40 AM
தர்மபுரி:கேரள சமாஜத்தின், 23-ம் ஆண்டு, 'ஓணம் திருவிழா' தர்மபுரியிருள்ள, ஸ்ரீராமா ஓட்டல் சுந்தரமஹாலில், தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் நேற்று நடந்தது. கேரள சமாஜய செயலாளர் ஹரிக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் நாராயணசாமி, பொருளாளர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கைலாஷ்குமார், முன்னாள் அரிமா மாவட்ட ஆளுனர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். இதில், கேரள மாநிலம் ஒத்தப்பாலம், வள்ளுவநாடு, கிருஷ்ண கலா நிலையம் ராஜூ மற்றும் உன்னி குழுவினரின் கேரள கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கேரள சமாஜ மகளிரணி சார்பில், கை கொட்டி களி நடனம் நடந்தது. சமாஜ செயற்குழ உறுப்பினர் ராஜசேகர், மகாபலி சக்கரவர்த்தியாக வேடமணிந்து, விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஆசி வழங்கினார். மண்டப முகப்பில் மகளிரணியினர் பாரம்பரிய உடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு அனைவரையும் வரவேற்றனர்.ஓணம் விழாவில், கலந்து கொண்ட அனைவருக்கும் கேரள பாரம்பரிய, 'ஓணம் சத்யா' 23 வகை பதார்த்தம் மற்றும் அடை பாயாசத்துடன் உணவு பரிமாறப்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்ட சமாஜ உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கேரள சமாஜ உறுப்பினர்கள் செய்திருந்தனர்.