/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 3 பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதல் பேக்கரி மாஸ்டர் உட்பட 2 பேர் பலி 3 பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதல் பேக்கரி மாஸ்டர் உட்பட 2 பேர் பலி
3 பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதல் பேக்கரி மாஸ்டர் உட்பட 2 பேர் பலி
3 பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதல் பேக்கரி மாஸ்டர் உட்பட 2 பேர் பலி
3 பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதல் பேக்கரி மாஸ்டர் உட்பட 2 பேர் பலி
ADDED : ஜூன் 10, 2025 01:30 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அருகே நேற்று மாலை, 3 பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில், இருவர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு, 31. இவர் நேற்று மாலை, 3:00 மணிக்கு சிங்காரப்பேட்டையில் இருந்து பெரியதள்ளப்பாடி நோக்கி, ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். அப்போது எதிரே திருப்பத்துார் மாவட்டம், சேம்பறை கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜ், 40, பேஷன் ப்ரோ பைக்கில் வந்தார்.
இரு பைக்குகளும் நேருக்கு நேராக மோதின. அப்போது சிங்காரப்பேட்டையிலிருந்து பெரியதள்ளப்பாடி நோக்கி, கேத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் வினோத், 24, அவரது நண்பர் ராஜசேகர் ஆகியோர் வந்த பல்சர் பைக், தென்னரசு பைக் மீது மோதியது. இதில், தென்னரசு, வினோத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த ராஜசேகர், சேம்பறை கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிங்காரப்பேட்டை போலீசார், படுகாயமடைந்த இருவரையும், சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் பலியான இருவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.