Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி மாவட்டத்தில் 15,523 கூடுதல் வாக்காளர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் 15,523 கூடுதல் வாக்காளர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் 15,523 கூடுதல் வாக்காளர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் 15,523 கூடுதல் வாக்காளர்கள்

ADDED : ஜன 23, 2024 10:25 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு அக்., 27 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்தது. நேற்று, இறுதி வாக்காளர் பட்டியலை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

இதில், பாலக்கோடு சட்டசபை தொகுதியில், 1,20,301 ஆண் வாக்காளர்கள், 1,17,857 பெண் வாக்காளர்கள், 19 இதர வாக்காளர் என மொத்தம், 2,38,177 வாக்காளர்களும், பென்னாகரம் சட்டசபை தொகுதியில், 1,26,596 ஆண், 1,18,591 பெண், 8 இதரர் என, 2,45,195 வாக்காளர்களளும் உள்ளனர்.

தர்மபுரி சட்டசபை தொகுதியில், 1,30,757 ஆண், 1,28,419 பெண், 98 இதரர் என மொத்தம் 2,59,274 வாக்காளர்கள் உள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபையில் 1,28,495 ஆண் வாக்காளர்கள், 1,27,813 பெண் வாக்காளர்கள், 14 இதரர் என, 2,56,322 வாக்காளர்களும், அரூர் (தனி) சட்டசபையில், 1,22,113 ஆண், 1,21,724 பெண், 20 இதரர் என, 2,43,857 வாக்காளர்கள் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதியில், 6,28,262 ஆண் வாக்காளர்கள், 6,14,404 பெண் வாக்காளர்கள், 159 இதரர் என மொத்தம், 12,42,825 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில், உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, இறுதி வாக்காளர் பட்டியலில், 15,523 வாக்காளர்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஆர்.டி.ஓ.,க்கள் கீதாரணி, வில்சன் ராஜசேகர், தேர்தல் தாசில்தார் அசோக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us