/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய 15 வயது சிறுமி மீட்பு இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய 15 வயது சிறுமி மீட்பு
இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய 15 வயது சிறுமி மீட்பு
இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய 15 வயது சிறுமி மீட்பு
இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய 15 வயது சிறுமி மீட்பு
ADDED : ஜூன் 02, 2025 03:34 AM
தர்மபுரி: தேனி மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது சிறுவனுக்கும், தர்மபு-ரியை சேர்ந்த, 15 வயது மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல்போனில் பேசி வந்த நிலையில் காதலாக மாறியது.
கடந்த, 3 நாட்களுக்கு முன் மாணவி மாயமானார்.இது குறித்து அவரது பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவி இன்ஸ்டாகிராம் காதலனுடன் தேனியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார், தேனி சென்று இருவரையும் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அறிவுரை கூறி, மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனை போக்சோ சட்டத்தில் வழக்குப்ப-திந்து பின், ஜாமினில் விடுவித்தனர்.