/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு
அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு
அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு
அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 11, 2024 01:53 PM
தர்மபுரி: அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, பள்ளி மேலாண்மை குழு சார்பில், மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தர்மபுரி அருகே, கடகத்துாரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 4 ஆசிரியர்கள், 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி மேலாண்மை குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதில் முதல் வகுப்பில் சேர்ந்த, 20 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுமார், ஆசிரியர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், பள்ளியில் மாணவர் சேர்க்கையில் கடந்தாண்டை விட, இந்தாண்டு, பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.