ADDED : ஜூன் 28, 2024 01:00 AM
அரூர், தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'அரூரில் கடந்த, 3 நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 1,800 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை குறைந்து ஒரு கூடை தக்காளி, 800 முதல், 900 ரூபாய் வரை விற்பனையானது. மண்டிகளுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதே, விலை சரிவுக்கு காரணம்' என்றனர்.