ADDED : ஜூலை 07, 2024 05:50 AM
தர்மபுரி : முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு டேப் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு, கலெக்டர் சாந்தி டேப் வழங்கினார்.
இதிலிருந்து, ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் நிலை அறிதல், மதிப்பீடுகள் செய்தல் ஆகியவற்றை அறி-யலாம். மேலும், தமிழக கல்வித்துறையால் அறிமுகப்படுத்தப்-பட்டுள்ள அனைத்து ஆப்களையும், பதிவிறக்கம் செய்து மாண-வர்களின் கற்றல் நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆசிரி-யர்கள் ஒரே பாடத்தை வெவ்வேறு வழிகளில் கற்பிக்க, மின் கற்றல் முறையை பயன்படுத்தலாம். கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை, எல்லோருடனும் ஒருங்கிணைக்க உதவும். மாண-வர்களின் கற்றல் விளைவுகளில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர உதவுகிறது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி உள்பட பலர் பங்கேற்றனர்.