ADDED : ஜூன் 06, 2024 04:25 AM
தர்மபுரி: கோடை உழவிற்கும் மானியமாக, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 700 ரூபாய் வழங்கப்படும் என, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.இது குறித்து, தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாவது:கோடை உழவிற்கு மானியம் பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு, தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில், வேளாண் இடுபொருட்களை பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். அதேபோல், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், உழவு மானியத்திற்கு ஒரு ஏக்கருக்கு, 500 ரூபாய் மற்றும் சாகுபடி செய்வதற்கு தேவையான உளுந்து, சோளம், நிலக்கடலை, எள் போன்ற விதைகள் வாங்குவதற்கு, 700 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு கிராம திட்டத்தில், ஒரு பயிர் சாகுபடிக்கு எள், நெல், சூரியகாந்தி, நிலக்கடலை ஆகிய விதைகள் மற்றும் இயற்கை உர இடுபொருட்கள், 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகள் பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.