/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அடுத்தடுத்த கொள்ளை: ஓசூர் மக்கள் அதிர்ச்சி அடுத்தடுத்த கொள்ளை: ஓசூர் மக்கள் அதிர்ச்சி
அடுத்தடுத்த கொள்ளை: ஓசூர் மக்கள் அதிர்ச்சி
அடுத்தடுத்த கொள்ளை: ஓசூர் மக்கள் அதிர்ச்சி
அடுத்தடுத்த கொள்ளை: ஓசூர் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 28, 2024 03:01 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை, கடந்த, 5ல், மர்ம கும்பல் உடைத்து கொள்ளையடிக்க முயன்றது.
கடந்த, 6 அதிகாலை, 3:00 மணிக்கு ஓசூரில், என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் உள்ள ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை காஸ் வெல்டிங் செய்து உடைத்து, 14.50 லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் கொள்ளையடித்தது.
இச்சம்பவம் அடங்குவதற்குள் கடந்த, 21 இரவு ஜூஜூவாடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின், ஓசூர் சிப்காட் கிளையின் ஷட்டரை உடைத்து, மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. அதன் அருகே உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தையும் மர்ம கும்பல் உடைத்துள்ளது. ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை.
அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்பிரேயை மர்ம கும்பல் அடித்துள்ளது. கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா டி.வி.ஆரை மர்ம கும்பல் எடுத்துச் சென்றது. எத்தனை பேர் கொள்ளையடிக்க வந்தனர் என்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
ஓசூர் பகுதியை குறிவைத்து, வடமாநில கும்பல் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, கொள்ளை கும்பல் ஓசூர் அல்லது பெங்களூரில் முகாமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போலீசாரால் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. இது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதற்குமுன், கிருஷ்ணகிரி அடுத்த, குந்தாரப்பள்ளி ராமாபுரம் பேங்க் ஆப் பரோடா வங்கிக்குள், 2015 ஜன., 24ல் புகுந்த வட மாநில கும்பல், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6,000 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றது.
கடந்த, 2021 ஜன., 20ல், ஓசூர் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த வட மாநில கும்பல், 15 கோடி ரூபாய் மதிப்பு நகையை கொள்ளையடித்தது.
குருபரப்பள்ளியில் ஏப்., மாதம் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை, காஸ் வெல்டிங் செய்து உடைத்த வட மாநில கும்பல், 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது.
போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கைது செய்ய, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.