Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தர்மபுரியில் இன்று ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தர்மபுரியில் இன்று ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தர்மபுரியில் இன்று ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தர்மபுரியில் இன்று ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

ADDED : ஜூலை 10, 2024 10:00 PM


Google News
தர்மபுரி:ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த, டிச., 18 ல் துவக்கி வைத்தார். அதன்படி முதற்கட்டமாக நகர பகுதிகளில் கடந்த டிச., மற்றும் ஜன., மாதங்களில் முகாம் நடந்தது. இதில், 15 அரசு துறை சார்ந்த, 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2 வது கட்டமாக இன்று (11ம் தேதி) ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவங்கப்படுகிறது.

அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் பஞ்.,ல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, ஊரக பணிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

அதற்காக இன்று காலை, 10:40 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம், சேலம் வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும், பாளையம்புதுார் அரசு பள்ளி வளாகத்திற்கு, 11:30 வருகிறார். அங்கு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிடும் அவர், மதியம், 12:03 மணிக்கு ஊரகப்பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கிவைத்து பேசுகிறார்.

தொடர்ந்து, சேலம் கோட்டத்தில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும், 20 புதிய டவுன் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின்னர், தர்மபுரி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தும், 2,014 பயனாளிகளுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

விழா நிறைவுக்கு பின் மதியம், 12:45 மணிக்கு கார் மூலம் சேலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து விமானம் மூலம், 1:15 சென்னை செல்கிறார்.

இதனிடையே நேற்று, திட்ட துவக்க விழா நடக்கும் அரசு பள்ளி வளாகத்தில் நடந்து வரும் பணிகளை, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us