/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குண்டம்பட்டி முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை குண்டம்பட்டி முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
குண்டம்பட்டி முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
குண்டம்பட்டி முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
குண்டம்பட்டி முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 22, 2024 12:09 PM
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த, காவிரியாற்றின் நீர்த்தேக்க பகுதி அருகே, குண்டம்பட்டி முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 6 முதல், 10 மணி வரை அருள்வாக்கு நடப்பது வழக்கம்.
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி உள்ளிட்டவை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.