/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல் பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 14, 2024 01:27 AM
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நகர் பகுதியில் ஏற்படும் தொடர் திருட்டை தடுக்க, போலீசாரின் இரவு ரோந்துக்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி, பாலக்கோடு நகர் பகுதி மற்றும் எம்.ஜி.,ரோடு பகுதியில், பல வணிக நிறுவனங்கள், நகை, ஜவுளி, சில்வர் மற்றும் பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு, பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். பெரும்பாலான இந்த கடைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இரவில் கடைகளின் பூட்டை உடைத்து, திருட்டுச்சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து, பலமுறை தகவல் தெரிவித்தும் போலீசார் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என, கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
போலீசாரும், இரவில் ரோந்து பணிக்கு வராததால், இவ்வாறான திருட்டு சம்பங்கள் தொடர்ந்து நடப்பதாக, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து நடக்கும் திருட்டை தடுக்க, போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.