/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் சாதனை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் சாதனை
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் சாதனை
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் சாதனை
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் சாதனை
ADDED : ஜூன் 06, 2024 03:50 AM
தர்மபுரி: தர்மபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 'நீட்' பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று, தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும், சிறந்த மதிப்பெண்கள் பெற்றனர்.இதில் கோகுலபிரியன், 665, டினிஷா, 653 மற்றும் ஆதீஷ்வரன், 641 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
600 மதிப்பெண்களுக்கு மேல், 6 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 12 மாணவர்களும் பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய இப்பள்ளி மாணவர், 'நீட்' தேர்வில், 574 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும், 15 மாணவர்களுக்கு மேல், கட் ஆப் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர். சாதனை புரிந்த அனைத்து மாணவ, மாணவியரையும் செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி துணைத்தலைவர் மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் சக்திவேல், முதல்வர் வள்ளியம்மாள், முதல்வர் (நிர்வாகம்) ரபிக் அஹமத், துணை முதல்வர் கவிதா, அனைத்து பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதார வாழ்த்தினர். தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'நீட்' பயிற்சி பெற்று தேர்வு எழுதி, முதல் மூன்றிடம் பிடித்த மாணவர்கள் கோகுலபிரியன், டினிஷா, ஆதீஷ்வரன் ஆகியோருக்கு ஊக்கப்பரிசாக தலா, 1 லட்சம், 75,000 மற்றும் 50,000 ரூபாயை, செந்தில் குழுமத்தலைவர் செந்தில் கந்தசாமி வழங்கினார்.