/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு
பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு
பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு
பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஜூன் 13, 2024 05:31 PM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், கடத்துார் எஸ்.எஸ்.ஐ.,க்கள் சண்முகம், சவுந்தர்ராஜன், ஏட்டு நாராயணன் ஆகியோர் கடந்த, 11 இரவு, 8:00 மணிக்கு, கடத்துார் டவுனில் ரோந்து சென்றனர்.
அப்போது கடத்துார் நுாலகம் அருகே பெத்தானுாரை சேர்ந்த சிங்காரவேலன், 32, விஜய், 30, ஆகிய இருவரும், கையில் கட்டையுடன் நின்று கொண்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் இவ்வாறு பேசுவது தவறு என போலீசார் கூறியதற்கு, போலீசை தகாத வார்த்தையால் பேசி, பணி செய்ய விடாமல் அவர்கள் தடுத்தனர். புகார் படி, இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.