Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஏரியூர் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி கேட்டு மனு

ஏரியூர் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி கேட்டு மனு

ஏரியூர் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி கேட்டு மனு

ஏரியூர் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி கேட்டு மனு

ADDED : ஜூலை 02, 2024 10:58 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம், மா.கம்யூ., கட்சி சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ஏரியூர், பனங்காடு, ஒட்டப்பள்ளம், முனியப்பன் கோவில் ஆகிய பகுதியில், 1,000 குடும்பங்கள், 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். கிராமத்தை ஒட்டிய ஆற்றோர பகுதியில் தண்ணீர் இல்லா காலங்களில், விவசாயிகள் நிலக்கடலை, மிளகாய், கம்பு, ராகி, சோளம் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு உட்பட்ட பகுதி வனத்துறைக்கு சொந்தமானது அதிகாரிகள் கூறி, நீர்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்வதை வனத்துறையினர் தடை செய்து வருகின்றனர். இதனால், காலம் காலமாக சாகுபடி செய்து வரும், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீர்பிடிப்பு பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

இதில், மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் சிசுபாலன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us