/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஓடக்கல் கடத்தல் :டிராக்டர் பறிமுதல் ஓடக்கல் கடத்தல் :டிராக்டர் பறிமுதல்
ஓடக்கல் கடத்தல் :டிராக்டர் பறிமுதல்
ஓடக்கல் கடத்தல் :டிராக்டர் பறிமுதல்
ஓடக்கல் கடத்தல் :டிராக்டர் பறிமுதல்
ADDED : ஜூன் 01, 2024 02:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி;பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நாரணாபுரம் வி.ஏ.ஓ., தீபாவுக்கு வந்த ரகசிய தகவல்படி, நேற்று காலை கோபாலபுரம்- செங்கரைக்கோட்டை செல்லும் சாலையில், சுகர் மில் எதிரே உள்ள பெருமாள் கோவில் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கள்ளியூரை சேர்ந்த சண்முகம் என்பவர் டிராக்டரில் ஓடக்கல் ஏற்றி வந்தார். டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்தார். அதில், அரசு அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை ஏ.பள்ளிப்பட்டி போலீசில் ஒப்படைக்க வி.ஏ.ஓ., கூறினார். ஆனால் சண்முகம் டிராக்டரை அங்கே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.இதுகுறித்து வி.ஏ.ஓ., தீபா அளித்த புகார்படி, ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடக்கல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.