Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உள்துறை செயலாளரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு

உள்துறை செயலாளரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு

உள்துறை செயலாளரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு

உள்துறை செயலாளரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு

ADDED : ஆக 02, 2024 01:38 AM


Google News
அரூர், அரூர் தொகுதிக்கு உட்பட்ட தீர்த்தமலையில், புதிய போலீஸ் ஸ்டேஷன், சித்தேரி பஞ்.,க்கு உட்பட்ட சேலுார் அம்மாபாளையம், குள்ளம்பட்டி, மண்ணுார் பகுதிகளை, கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும், கலசப்பாடி மலைப்பகுதியை கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும், சித்தேரியை அரூர் போலீஸ் ஸ்டேஷனிலும் இணைக்கக்கோரி, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரிடம் மனு அளித்தார்.

அதேபோல், சித்தேரி, வேடகட்டமடுவு, சிட்லிங், வீரப்பநாயக்கன்பட்டி ஆகிய, 4 பஞ்.,களை இரண்டாக பிரிக்கக்கோரி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலாளர் ககன்சிங்பேடியிடம் மனு அளித்தார். மேலும், தாமலேரிப்பட்டியில் தென்பெண்ணையாற்றில் இருந்து நீரேற்றும் திட்டம் மற்றும் மாம்பட்டி குமரன் தடுப்பணை திட்டம், கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம் ஆகியவற்றை துவங்கக்கோரி, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகத்திடம் மனு அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us