/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தராசுகளில் முத்திரை அதிகாரிகள் ஆய்வு தராசுகளில் முத்திரை அதிகாரிகள் ஆய்வு
தராசுகளில் முத்திரை அதிகாரிகள் ஆய்வு
தராசுகளில் முத்திரை அதிகாரிகள் ஆய்வு
தராசுகளில் முத்திரை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 24, 2024 02:17 AM
நல்லம்பள்ளி:சிறுகடை வியாபாரிகள் மற்றும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வோர், தராசுகளில் முத்திரை இல்லாமல் விற்பனை செய்து வருவதால், எடையில் மாறுபாடு உள்ளதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து, நல்லம்பள்ளியில் நேற்று வாரச்சந்தையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையை சேர்ந்த, துணை ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் திவ்யா, முத்திரை ஆய்வாளர் அருண் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கடைகளில் பயன்படுத்திய இரும்பு எடை கல், தராசுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை ஆய்வு செய்தனர். அதில் முத்திரை இல்லாத தராசுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தராசுகளில் முத்திரை இல்லாமல் விற்பனை செய்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.