/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 01:56 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தடங்கம் பஞ்.,ல் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, கோமாரி நோய் தடுப்பு திட்டத்தில், 5 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம், எருமை இனங்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம், 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஜூன், 10 முதல், 30 வரை நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்திற்கு, 3.47 லட்சம் டோஸ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.56 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது.
கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய, 83 குழுக்கள் அமைக்கப்பட்டு, இப்பணி அனைத்து குக்கிராமங்கள், மலை கிராமங்களிலுள்ள மாடுகள், எருமைகளுக்கு செலுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி, தடங்கம் பஞ்., தலைவர் கவிதா, உதவி இயக்குனர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.