/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி தொகுதி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் வாக்குவாதம் தர்மபுரி தொகுதி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்
தர்மபுரி தொகுதி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்
தர்மபுரி தொகுதி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்
தர்மபுரி தொகுதி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்
ADDED : ஜூலை 21, 2024 10:57 AM
அரூர்: சென்னையில் நடந்த தர்மபுரி லோக்சபா தொகுதி ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க., இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.லோக்சபா பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளுடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கடந்த, 10 முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, தர்மபுரி தொகுதி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தொகுதிக்கு, 2 பேர் வீதம் பேசினர். இதில் சிங்காரம் பேசும்போது, 'கடத்துாரில் நடந்த நிழற்கூடம் திறப்பு விழாவில், கோவிந்தசாமி எம்.எல்.ஏ., தன்னுடைய படத்தை மட்டும் போட்டுக் கொண்டார். பொதுச்செயலாளர் படத்தை கூட போடவில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார். பூத் கமிட்டியில், ஒரு தரப்பினரையே நியமனம் செய்ததால், அவர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை' என கூறினார்.
அதற்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ., 'நீ கூட, 1996ல் மோட்டாங்குறிச்சிக்கு சென்று அடி வாங்கி வந்தாய். ஓ.பி.எஸ்., அணிக்கு சென்று, கட்சிக்கு துரோகம் செய்தாய்' என பதிலளித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு சூழ்நிலை ஏற்பட்டது.முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், 'அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளை முன்னாள் அமைச்சர் அன்பழகன் வென்று கொடுத்தார்' எனக் கூறினார். அதற்கு சிங்காரம், 'அன்பழகன் எங்கு ஜெயிக்க வைத்தார், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்களும், அரூர் தொகுதி மக்களும் தான் ஜெயிக்க வைத்தனர்.
அந்த தொகுதி மக்களுக்கு தான் நன்றி சொல்லணும், அன்பழகனுக்கு எதற்கு நன்றி சொல்லணும், அன்பழகன் தான் ஓட்டு போட்டாரா, நாங்கள் எல்லாம் வேலை செய்யவில்லையா. எல்லா மாவட்டமும் கட்சி ரீதியாக பிரித்த நிலையில், தர்மபுரி மாவட்டம் பிரிக்கப்படாமல் உள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள, தி.மு.க.,வே, தர்மபுரி மாவட்டத்தை இரண்டாக பிரித்துள்ளது.
எனவே தர்மபுரி மாவட்டத்தை பிரித்தால் தான், நன்றாக செயல்பட முடியும். எனக்கு பொறுப்பு போடுங்கள் என கேட்கவில்லை. யாரை போட்டாலும் சரி' என பேசியுள்ளார்.தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஒருவர் கூட சரியில்லை என, குற்றம் சாட்டியுள்ளனர். அன்பழகன் பேசுகையில், '2026 தேர்தலில், மாவட்டத்திலுள்ள, 5 தொகுதிகளிலும் கட்சியை ஜெயிக்க வைத்து காட்டுகிறேன்' என கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.