/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : ஜூன் 27, 2024 04:11 AM
தர்மபுரி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசின், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 507 காலிப்பணியிடங் களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2' மற்றும், 1,820 காலிப்பணியிடங்கள் கொண்ட, 'குரூப் - 2 ஏ' ஒருங்கிணைந்த முதல்நிலை தேர்விற்கான, இலவச பயிற்சி நடக்க உள்ளது. தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் நாளை, 28 முதல் ஜூலை, 5 வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் தொடர்ந்து இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், இந்த அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04342-296188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்
பெறலாம். இவ்வாறு, அவர்
தெரிவித்துள்ளார்.