ADDED : ஆக 04, 2024 01:49 AM
தர்மபுரி, ஆடி, 18ம் நாள் மஹாபாரத போரில் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நடந்த யுத்தத்தில் கவுரவர்களை வீழ்த்தி, பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். இதையொட்டி நேற்று, தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடந்தது. துரியோதனன், பீமன், கிருஷ்ணர் வேடமணிந்த தெருக்கூத்து கலைஞர்கள், ஊர் முழுவதும் சுற்றி வந்து, ஊரிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு முன், துரியோதனன் உருவத்தை மண்ணில் செய்து வைத்து கலை நிகழ்ச்சி நடத்தினர்.
தெருக்கூத்து கலைஞர்கள், மஹாபாரத காட்சிகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். நேற்று மாலை, திரளான பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.