/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 12:14 PM
தர்மபுரி: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து, நா.த.க., சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், நா.த.க., மாநில பொறுப்பாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினால் தொடர்ந்து, அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, கூலிப்படை கலாசாரம், ரவுடிகளின் அட்டூழியம், வன்முறை தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறி, 3 ஆண்டுகளில், 3 முறை மின் கட்டணத்தை உயர்த்திய, தமிழக அரசை கண்டித்து, நா.த.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது.
இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் கேப்டன் துரை உட்பட நிர்வாகிகள் என, 100க்கும் மேற்பட்டோர், தமிழக அரசுக்கு எதிராக, கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.