/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உலக இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா உலக இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா
ADDED : ஜூலை 29, 2024 02:10 AM
ஏரியூர்: பென்னாகரம் தாலுகா, ஏரியூர் அருகே, புதுார் சோளப்பாடி கிரா-மத்தில், சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தையொட்டி, 100 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் விழா நடந்தது.
நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். தமிழக அரசின் துாய தமிழ் பற்றாளர் விருது பெற்ற நாகராஜ் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் மாது, துணை சேர்மன் தனபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், கவுன்சிலர் மயில்சாமி உள்ளிட்ட ஏராளமனோர் பேசினர். ஏரியூர் இன்ஸ்-பெக்டர் யுவராஜன் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.
இதில், 100 மரக்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட், பேனா வழங்கப்பட்டது. ஏராளமான ஊர்மக்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.