/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் காய்கறி விலை கூடுதலால் மக்கள் அதிருப்தி அரூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் காய்கறி விலை கூடுதலால் மக்கள் அதிருப்தி
அரூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் காய்கறி விலை கூடுதலால் மக்கள் அதிருப்தி
அரூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் காய்கறி விலை கூடுதலால் மக்கள் அதிருப்தி
அரூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் காய்கறி விலை கூடுதலால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 26, 2024 03:28 AM
அரூர்: அரூர் உழவர் சந்தையில் விவசாயிகள் போர்வையில், வியாபா-ரிகள் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காய்கறி, பழங்களை பயிரிடும் விவசாயிகளின் விளைபொருட்-களை இடைத்தரகரின்றி நேரடியாக சந்தை படுத்துவதற்காக கடந்த, 1999ல் -உழவர் சந்தை என்ற திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டம், அரூரில் செயல்படும் உழவர் சந்-தையில், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து கொண்டு வரப்-படும் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, பூசணி, பீர்க்கன், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்-பனை நடக்கிறது. உழவர் சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்-கானோர் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நி-லையில் இங்கு விவசாயிகள் போர்வையில், வியாபாரிகள் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதாக பொது-மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உழவர் சந்தையிலுள்ள கடைகளில், விவசாயிகள் இல்லாமல், வியாபாரிகள்தான் அதிகளவில் உள்ளனர். இதனால், தனியார் காய்கறி கடையை விட, விலை கூடுதலாக உள்ளது. காய்கறிகள் கிலோவுக்கு, 5 முதல், 20 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்-பனை நடக்கிறது. இதனால், உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைவாக இருக்கும் என, எதிர்பார்த்து வரும் பொது-மக்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைகின்றனர். எனவே, உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவ-துடன், சரியான விலையில் காய்கறிகள் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவி வேளாண் அலுவலர் (பொறுப்பு) தமிழரசு கூறியதாவது:
உழவர் சந்தைக்கு, காய்கறி சாகுபடி விவசாயிகளை கெஞ்சாத குறையாக அழைக்கிறோம். அவர்கள் வர மறுக்கின்றனர். உழவர் சந்தையில், பெரும்பாலானோர் விவசாயிகள் தான். ஒன்றிரண்டு வியாபாரிகள் உள்ளனர். உழவர் சந்தையில் நாங்கள் எழுதும் விலைக்கு தான் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டை விட, உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.