ADDED : ஜூலை 24, 2024 02:19 AM
அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த காட்பாடியில், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் மூலம், அரூர் வட்டார ஒருங்கிணைந்த பண்ணையகம் ஒரு நாள் களப்பயிற்சி என்ற தலைப்பில் அளிக்கப்பட்டது.
இதில் கால்நடைகள் பராமரிப்பு, ஒருங்கிணைந்த பண்ணையில் அதிக வருமானம் தரும் தொழில்நுட்பங்கள், பால் காய்ச்சல் நோயின் முக்கியத்துவம், சினை மாடு பராமரிப்பு ஊட்டச்சத்து மேலாண்மை, நோய் பராமரிப்பு யாணியான் மிஸ்ரா எனும் சத்து பவுடர் அளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக கூறப்பட்டது. கால்நடைகளில் பால் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்கான வயல்வெளி ஆய்வு மற்றும் மாடுகளில் உனி நீக்க கட்டுப்பாட்டுக்கான, நானோ மெத்திக்கான் எனும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை விஞ்ஞானி தங்கதுரை பயிற்சி வழங்கினார்.