/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 19, 2024 01:31 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி கிராமத்தில், ஓடை புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இவற்றை, அதே பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி, சின்னதுரை உள்ளிட்ட, 12 பேர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் என, இருளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் தீர்ப்பில், 2 மாதத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற, வருவாய் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, தலை-மையில், ஏ.பி.டி.ஓ., இளங்கனி, ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிர-மிப்புகள் அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து எஸ்.ஐ., சரவணன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.