/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி அருகே, பிரியாணி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில், 4 பேர் கைது தர்மபுரி அருகே, பிரியாணி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில், 4 பேர் கைது
தர்மபுரி அருகே, பிரியாணி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில், 4 பேர் கைது
தர்மபுரி அருகே, பிரியாணி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில், 4 பேர் கைது
தர்மபுரி அருகே, பிரியாணி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில், 4 பேர் கைது
ADDED : ஜூலை 28, 2024 08:53 PM

தர்மபுரி:தர்மபுரி அடுத்த வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முகமது ஆசிப், 25; இவர் இலக்கியம்பட்டியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த, 26 அன்று இரவு, 9:30 மணிக்கு கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் முகமது ஆசிப்பை கத்தியால் குத்தி கொலை செய்த பின், அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து, தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் படி, சிசிடிவி.,யில் பதிவான காட்சிகளை வைத்து, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் தலைமையில், 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதில், சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த செட்டிபட்டியை சேர்ந்த ஜனரஞ்சன், 27, ஜனஅம்சபிரியன், 27, கௌதம், 28 மற்றும் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, சிவாடியை சேர்ந்த பரிதிவளவன், 24 ஆகிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தொடர்ந்து, 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலையான முகமது ஆசிப் என்பவர் கொலையாளிகளான ஜனரஞ்சன் மற்றும் ஜனஅம்சப்பிரியன் ஆகியோரின் சகோதரியை காதலித்துள்ளார். இதன் காரணமாக, இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில், கைது செய்த, 4 பேரரையும் தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.